திருப்பூர், சாமுண்டிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், மகேஷ்வரி தம்பதியினர் கருப்பையா என்ற 12 வயது தங்கள் மகனை கருணைக்கொலை செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், தங்கள் மகன் கருப்பையாவுக்கு 1 வயதாக இருக்கும் போது திடீரென காய்ச்சல் வந்து அவரின் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திடீரென எங்கேயாவது வெளியில் சென்றுவிடுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து வீசுவது, உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான்.
மருத்துவர்களிடம் தங்கள் மகனை காண்பித்தும் குணமடைய வாய்பில்லை என தெரிவித்துவிட்டனர். மனநல காப்பகத்தில் சேர்க்கச் சென்றால் அவர்கள் இவனை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றனர். எங்கள் மகனின் நிலையை பார்த்து எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.
எனவே எனது மகன் கருப்பையாவை காப்பகத்தில் சேர்க்க உதவ வேண்டும், இல்லையென்றால் அவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போதே மன வளார்ச்சி குன்றி அந்த சிறுவன் அருகில் இருந்த பொருளை தூக்கி வீசனான். இதனையடுத்து அந்த மனுவை வாங்கிய ஆட்சியர் அந்த சிறுவனை காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.