சென்னை சிஐடி காலனியில் நள்ளிரவில் ஆளில்லா குட்டி விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பறக்க விட்ட நடிகர் பாண்டியராஜன் மகன் நண்பருடன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். சென்னையில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரிமோட் மூலம் பறக்கும் ஆளில்லா விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சிஐடி காலனி பிஷப் வேலஸ் அவென்யூவில் சிறிய வகை ஆளில்லா குட்டி விமானம் பறப்பதாகவும், அதில் ரகசிய கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல அதிநவீன கருவிகள் இருப்பதாகவும், இதன் மூலம் சிஐடி காலனி பகுதி முழுவதையும் யாரோ நோட்டம் விடுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். காரணம் முக்கிய பிரமுகர்கள் பலர் வசிக்கும் பகுதியில் இதுபோன்று குட்டி விமானம் பறந்து படம் பிடித்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி விரைந்து சென்ற போலீசார் முதல் கட்டமாக ரிமோட் மூலம் இயங்கிய குட்டி விமானத்தை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், ஆளில்லாத குட்டி விமானத்தை பறக்க விட்டது பிரபல நடிகர் பாண்டியராஜனின் 2வது மகன் பிரேம் ராஜன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்துவதற்காக சோதனை செய்வதற்காகவே புதிதாக வாங்கப்பட்ட குட்டி விமானத்தை நண்பர்களுடன் சேர்ந்து பறக்க விட்டேன் என்று அவர் தெரிவித்தார். பிரேம் ராஜன் தி.நகரில் வசித்து வருகிறார். சிஐடி காலனியில் வந்து ஏன் பறக்க விட்டீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, தி.நகரில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அங்கு பயன்படுத்தினால் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இங்கு வந்து குட்டி விமானத்தை பறக்க விட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது பதில் போலீசாருக்கு திருப்தியாக இல்லை. இதைத் தொடர்ந்து தடையை மீறி குட்டி விமானத்தை பறக்க விட்டதாக கூறி 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். பின்னர், இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். பிரேம் ராஜன் ஏற்கனவே, இதுபோன்று தடை செய்யப்பட்ட ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானத்தை பறக்க விட்ட சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இதுபோல் தடையை மீறி பறக்க விட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என பிரேம் ராஜனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.