சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பிறந்த நாளில் இருந்து பால் கறக்கும் அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (37), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில், ஒரு மாடு சினை பிடித்தது. இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகிய பெண் கன்று ஒன்றை ஈன்றது. எப்போதும் கன்று போடும் மாட்டிற்கு பால் சுரக்கும் மடி பெரியதாக இருக்கும். அதேபோன்று இந்த மாட்டிற்கும் பால் மடி நன்றாக இருந்தது. ஆனால், கன்றுக்குட்டிக்கும் பிறந்ததில் இருந்தே மாட்டிற்கு இருப்பதை போலவே பால் சுரக்கும் மடி பெரியதாக இருந்தது. இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த வேலு, நாளடைவில் சரியாகிவிடும் என்றிருந்த நிலையில் கன்றுக்குட்டியின் மடியில் இருந்து பால் சுரந்தது. மாட்டிடம் பால் கறப்பதற்காக அவிழ்த்து விட்டபோது, குட்டியின் மடியில் இருந்தும் பால் சுரந்து சொட்டு சொட்டாக கொட்டியது. இதனைப்பார்த்த வேலு, கன்றுக்குட்டியின் மடியில் பாலை கறந்துள்ளார். அப்போது, அரை லிட்டர் அளவிற்கு பால் கிடைத்துள்ளது. அந்த கன்றுக்குட்டியினை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து வேலு அதேபகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் கூறும்போது ஹார்மோன் பிரச்சினையால் எப்போதாவது சில நேரங்களில் இதுபோன்று லட்சத்தில் ஒரு இடத்தில் நடக்கும். இதனால், எந்தவித பாதிப்பும் கிடையாது. நாளடைவில் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.