Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

ஒரே நாளில் இடி மின்னலுக்கு 70 பேர் பலி


பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் இடி மின்னலுக்கு  ஒரே நாளில் 70 பேர் பலியாகியுள்ளனர்.

பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னல் தாக்கியதில் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் பீகாரில் இறந்து போயுள்ளனர்.

இதில் 47  இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்க பீகார்  அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், அம்மாநில பேரிடர் மீட்புக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பீகாரில்  அக்டோபர் ஜுலை மாதத்தில்  கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்வது வழக்கம். இந்த சமயத்தில் உயிரிழப்புகள் அதிகமாகவே இருக்கும். பாட்னாவில் மட்டும் 16 பேர் அதிகபட்சமாக பலியாகியுள்ளனர். உத்தரபிரதேசத்திலும் இடிமின்னலுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் அதிகபட்சமாக இடி மின்னலுக்கு 2,500 பேர் பலியாகினர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.