Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - ஒரு கப்,
வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) - தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி, கேரட் (துருவியது), குடமிளகாய் (நறுக்கியது) - தலா அரை கப்,
பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2,
தனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரெட்டை பொடி செய்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியதும் அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து, வேகவிடவும்.

* காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான ஓட்ஸ் கட்லெட் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.