Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

தமிழர்களுக்காக புதிய கட்சி... விளக்கும் விக்னேஸ்வரன்!


 தமிழர்களுக்காக புதிய கட்சி தொடங்கும் திட்டமில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளியானது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ''இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனுடன் நல்லுறவையே நான் பேணுகிறேன். எங்களுக்குள் எந்தவொரு பகையுமில்லை.

அத்தோடு, வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த யோசனைக்கு சம்பந்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தமிழர்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக உள்ளார். தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்சி தேவையில்லை. புதிய கட்சியை ஆரம்பிப்பதால், எந்தவித லாபமும் ஏற்படப் போவதில்லை" என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.