Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

நம் தேசத்தை எந்த தீயசக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது! -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நம்பிக்கை


நம் தேசத்தை எந்த தீயசக்திகளாலும் ஒன்றும் செய்திட முடியாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதித் தோவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

புணேவில் உள்ள தகவல்தொழில்நுட்பப் பூங்காவில், 'வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''நமது நாட்டில் மொழி, கலாசாரம் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில்தான் ஒன்றுபடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கும் நமது தேசத்தை எந்த தீயசக்திகளாலும் ஒன்றும் செய்துவிட முடியாது.

நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்யாதவர்கள்தான், நாடு சிதறுண்டுவிடும் என்று பேசி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற சம்பவங்களுக்கு நாட்டில் வசிக்கும் பிற மக்கள் எந்த வகையில் பதில் கொடுக்கிறார்கள் என்பது மிகமுக்கியம். நமது தேசத்துக்கென்று தனிப்பட்ட சக்தி உண்டு. அதன் மூலம் இதுபோன்ற சவால்கள் முறியடிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.