இந்தியாவில் வாட்ஸ் அப் சேவைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மனுவை மத்திய அரசிடம் முன்வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், குர்காவோனைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் சுதிர் யாதவ் என்பவர் இந்தியாவில் வாட்ஸ் அப் சேவைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ம, 'எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன்' எனக் குறிப்பிடப்படும் வசதியை வாட்ஸ் அப் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியால் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் முன்பு இருந்ததைவிடப் பாதுகாப்பு மிக்கவையாகி இருக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ் அப் சேவையில் பகிரப்படும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இனி மூன்றாம் நபர்களால் அணுக முடியாதவையாகி இருக்கின்றன.
இதன் பொருள் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பிவைத்தால் அதற்குரியவர் மட்டும் அதைப் படிக்க முடியும். மற்றவர்களுக்கு அந்தத் தகவல் கலைத்துப் போடப்பட்ட அர்த்தம் கொள்ள முடியாத குறியீடுகளாகவே தோன்றும். இந்நிலையில் இந்த புதிய 256-பிட் என்கிர்ப்ஷன் வசதியால் போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படும். குறிப்பாக தீவிரவாதம் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் தடை ஏற்படும். தேசிய நலன் கருதி சில வாட்ஸ் அப் தகவல்களை டிகிரிப்ஷன் செய்யலாம் என்றால்கூட வாட்ஸ் அப் சேவையில் டிகிரிப்ஷன் கோட் இல்லை. எனவே, இந்தியாவில் 'வாட்ஸ்-அப்' சேவைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்ததோடு, சுதிர் தனது மனுவை மத்திய அரசிடம் முன்வைக்குமாறும் அறிவுறுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.