தன்னை மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படும் போதும் அவர்களைப் பாதுகாக்க சட்டத்தை ஒருவர் தன் கையில் எடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரு நபர்களின் மேல்முறை யீட்டு வழக்கில் இந்த முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித் துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது, அண்டை வீட்டார் மற்றும் சிலரைத் தாக்கிய தாக குற்றம் சாட்டப்பட்டது. தங் களது பெற்றோரைத் தாக்கியவர் கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வர்கள் வாதிட்டனர். ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த விசாரணை நீதிமன்றம் அவர்களைக் குற்ற வாளிகள் எனக் கூறி தீர்ப்பளித்தது.
மேல்முறையீட்டில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தனர்.
இவ்வழக்கை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கீர்த்தி சிங் ஆகியோரடங் கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தங்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறவுகள் தாக்கப் படும்போது அவர்களைப் பாது காக்க சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது தவறில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மற்றவர்களைத் தாக்கி யிருப்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஏன் தாக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள் என்பதையோ, அவர்களின் உடலில் இருக்கும் ஏராளமான தழும்புகளுக்கான காரணங் களையோ விவரிக்க காவல் துறை தரப்பு தவறிவிட்டது. தங்களின் பெற்றோர் தாக்கப்பட்டதை அவர் கள் பார்த்ததால்தான் அவர்கள் இருவரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். அவர்களைப் பாதுகாக்க முயன்ற தால்தான் இருவரின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடுமையான, கூர்மையான ஆயுதங்களால் அவர்களின் பெற் றோர் தாக்கப்பட்டுள்ளனர்.அத னால், அவர்களின் தந்தை உயிரிழந் துள்ளார். தங்களின் பெற்றோர் தாக்கப்படுவதைப் பார்த்த இந்த மனுதாரர்களுக்கு பதில் தாக்குதல் நடத்த சட்டப்படி உரிமை உள்ளது. ஏன் இவர்கள் இருவருக்கும் தண் டனை அளிக்கப்படுகிறது என்பதை விசாரணை நீதிமன்றம் தெரிவிக்க வில்லை. சம்பவத்தின் மூல கார ணத்தை அரசு தரப்பு ஆராய வில்லை” எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்தனர்.
அண்மையில் ஹரியாணா காவல் துறை தலைவர் (டிஜிபி) கே.பி. சிங், “ஒரு பெண் பலாத் காரம் செய்யப்படுவதைப் பார்க் கும்போதோ அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சிப்பதைப் பார்க்கும்போதோ, அவர்களைப் பாதுகாக்கும்பொருட்டு சாதாரண மனிதன் குற்றவாளியைக் கொலை செய்யக்கூட உரிமை உள்ளது” எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.