Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

நுங்கம்பாக்கம் கொலையாளியின் புகைப்படம் வெளியீடு! (வீடியோ இணைப்பு)


சென்னை நுங்கம்பாக்க ரயில் நிலையத்தில் நேற்று காலை இளம்பெண் சுவாதி(25) வாலிபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று சென்னை மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படுகொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் நேற்று காலை குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.

சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.

ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.

என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.

காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.

இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் காவல் துறையினர் வந்தனர். மோப்ப நாய் கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை சென்றுள்ளது. பின் தொடர்ந்து சென்று காவல் துறையினர் கொலையாளி பயன்படுத்திய அரிவாளை கைப்பற்றினர்.

பின்னர் காவல் துறைக்கு கிடைத்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளதின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் கொலையாளி என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.