தன்னுடன் படித்த தோழிக்காக தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்லூரி இடத்தை ஒரு மாணவி விட்டுக்கொடுத்துள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவில் எஸ்.வர்ஷினி, என். ஜனனி ஆகிய இருவர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருச்சி சமயபுரத்திலுள்ள ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவரும் நெருங்கிய தோழிகள்.
இதில் வர்ஷினியின் கட்-ஆஃப் மதிப்பெண் 199 ஆகும். ஆனால் இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தோழியின் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75 ஆகும். ஆனால் இவர் பொதுப்பிரிவை(ஓ.சி.) சேர்ந்தவர்.
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில், கலந்தாய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு கிடைத்த இடத்தை தனது தோழிக்காக விட்டுக் கொடுத்துள்ளார் வர்ஷினி.
இதுகுறித்து வர்ஷினி கூறுகையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும்.
ஆனால், எனது தோழி ஓ.சி. வகுப்புப் பட்டியலில் இருப்பதால் அவருக்கு அதே கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
எனவே இந்த இடத்தை எனது தோழிக்கு விட்டுக் கொடுத்தேன்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு நானும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பேன். அங்கும் எங்களது நட்பு தொடரும் என்றார் அவர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.