Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

விஜயதரணிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்


முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகாததால் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயதரணி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜூன் 15ம் தேதி (இன்று) ஆஜராக நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயதரணி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.