தெறி படத்துல விஜய் யூஸ் பண்ண டி-ஷர்ட், விராட் கோலி ஹேர் ஸ்டைல் இதெல்லாம் ஏதோ ஒரு இன்ஸ்ஃபயர் ஆகி பண்ணது. ஆனா எல்லாருமே ஒருத்தரோட இன்ஸ்பரேஷன்ல அவர ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம். மீசை எப்படி வைக்கணும், வேஷ்டி கட்டுனா எவ்ளோ கம்பீரமா நடக்கணும், ஒருத்தர் கண்ண பாத்து எவ்ளோ கெத்தா பேசணும் இதெல்லாம் அவரோட இன்ஸ்பரேஷன் தான். எல்லாருக்குமே இது அவங்க அப்பாவா தான் இருக்கும்.
இவுங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஃபேஸ்புக் பேருக்கு பின்னாடி உள்ள அவங்களோட பேரு, அதுக்கு பின்னாடி உள்ள நம்மளோட டிகிரி, இப்படி பின்னாடி உள்ள எல்லா விஷயத்துலயும் அவங்க இருப்பாங்க.நம்மள முன்னாடி இருக்கணும்னு சொல்லிட்டு பின்னாடி நின்னு கைதட்டுற க்ளாஸிக் அப்பாக்கள்.
எல்லா வீட்டுலயும் தான் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணுவாங்க. ஏன்னா அப்பானா ரொம்ப பயம். ஸ்கூல் படிக்கும் போது ரேங்க் கார்டுல கையெழுத்து வாங்க நீட்டும் போது நல்ல மார்க் வாங்கி இருந்தாலும் ஏன்டா இந்த தடவ மார்க் குறைஞ்சிருக்குனு கேட்கும் போது ஒரு வித பயத்தோட தான் எல்லாருக்கும் பதில் வரும். ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போகும் போது வீடு, ஸ்கூல்னு இருந்த சூழல்ல இருந்து வெளி உலகத்துக்கு எப்படி என்ன தயார் படுத்திக்கணும்னு சொல்லி கொடுக்கறது அப்பா தான். நா நினைக்குற வேலைக்கு தான் போவேன்னு திமிரா பசங்க பேசும்போதெல்லாம் எல்லாம் என்ன வேணும்னாலும் பண்ணு அப்படினு சொல்லிட்டு வெளில போய் என் பையன் அவனுக்கு புடிச்ச வேலை பாக்குறான்னு சொல்லி பெருமைப்படுற 7ஜி ரெயின்போ காலணி டைப் அப்பாக்கள் நிறைய பேர் .
அப்பாக்களுக்கும், மகன்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனா கடைசில மகன்கள் தான் ஜெயிப்பாங்க...ஸாரி அப்பாக்கள் ஜெயிக்க வைப்பாங்க. இப்ப கூட ஒருத்தர் என்னப்பா அன்னையர் தினத்துக்கு ஃபீல் பண்ணி ஒரு வாரம் ஸ்டேட்டஸ் போட்ட, தந்தையர் தினத்துக்கு ஸ்டேட்டஸே கானோம்னு கேட்டா, எங்கப்பா பத்தி எழுத ஸ்டேட்டஸ்ல இடம் இல்லனு சொல்ற அளவுக்கு நிறைய பண்ணிருப்பாங்க.. அப்பாவிடம் பேசும் போது ஒரு பயம் இருந்தாலும் அவர் எனக்கு ஒரு ப்ரெண்டு மாதிரினு சொல்ல வைக்குர வாரனம் ஆயிரம் கிருஷணன் கேரக்டர எல்லாருமே கடந்து வந்திருப்போம்..
அவர்கிட்ட இருந்து அடியும் வாங்கி இருக்கேன். அன்பா தோள் மேல கைபோட்டு பேசியும் பாத்து இருக்கேன். எனக்கு ரோல் மாடல் எங்க அப்பானு சொல்றதுல பெருமையா இருக்கும். அதே சமயத்துல பயமாவும் இருக்கும். ஏன்னா நாளைக்கு என் பையனுக்கு நா ரோல்மாடலா இருப்பேனாங்குற சந்தேகம் தான் அப்படினு சொல்லுற பசங்க நிறைய பேர். அவங்ககிட்ட ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான். என்ன பத்தின எந்த விஷயத்தையுமே எனக்கிட்ட நேரா பாராட்டி பேச மாட்டாரு. பரவாயில்லை எப்படியோ என்ன பாராட்டுனா சரினு போய்டுவேன்.நம்மையெல்லாம் இவ்வளவு வருஷமா சமாளிச்சதுக்கு அவர்களுக்கு தினந்தினம் தந்தையர் தின வாழ்த்துக்கள் சொல்லணும். இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா சொல்லிக்கலாம்..,
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.