Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

மதுரை மருத்துவக் கல்லூரியில் சீட்: கவலை தோய்ந்த முகத்தோடு காணப்பட்ட காவலர் முனுசாமியின் மகள்


ஒசூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் முனுசாமியின் மகளுக்கு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனுசாமி நகைப் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களைப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்தார்.

பணியின்போது, உயிர்த் தியாகம் செய்ததைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி வழங்கவும், அவரது மகள் ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

முனுசாமி, தனது மகளை மருத்துவம் படிக்க வைக்க விரும்பினார். காவலர் முனுசாமியின் மகள் ரக்ஷனா பிளஸ் 2 தேர்வில் 1,182 மதிப்பெண் பெற்று, எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு 198.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தார். தரவரிசைப் பட்டியலில் 525-ஆவது இடத்தில் இருந்தார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் அவருக்கு மதுரை அரசு மருத்துக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

மகளை மருத்துவம் பயில வைக்க வேண்டும் என்பது முனுசாமியின் விருப்பம். தான் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்த போதும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, தன்னுடன் தனது தந்தை இல்லாததை நினைத்து மிகுந்த கவலையோடு காணப்பட்டார் ரக்ஷனா.

இது தொடர்பாக அவரது தாய் முனிலட்சுமி கூறுகையில், என் மகளுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். சென்னையில் நண்பர்களும், உறவினர்களும் இருக்கின்றனர். எனவே சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

ஆனால், அவரது வாய்ப்பு வருவதற்குள், சென்னை மருத்துவக் கல்லூரியில் 36 இடங்களும் நிரம்பிவிட்டன என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.