இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது.
அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவத்தில்தான் தென்ஆப்ரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கும் கண் பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டார். சோமர்செட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, மார்க் பவுச்சரின் கண்ணை பெயில் தாக்க, அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஆனால் தோனி அதிருஷ்டவசமாக பெரிய பாதிப்பில் இருந்து தப்பி விட்டார்.
நேற்றைய போட்டியுடன் சேர்த்து, இந்திய அணிக்காக 324 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தோனி சமன் செய்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.