பழநியில், கார் மோதி குட்டி இறந்தது தெரியாமல் அதை எழுப்ப முயற்சித்த குரங்குகளின் பாசப் போராட்டம், பக்தர்களை வேதனை அடைய செய்தது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில், ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. நேற்று காலை, 9:00 மணியளவில், இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி குரங்கு ஒன்று, தெற்கு கிரி வீதி வன துர்க்கையம்மன் கோவில் அருகே சாலையை கடந்தது. அப்போது, வேகமாக வந்த ஒரு கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அந்த குட்டி குரங்கு இறந்தது.
இதையடுத்து அங்கு குவிந்த பிற குரங்குகள், இறந்து கிடந்த குட்டியை எழுப்ப முயற்சி செய்தன. சாலையில் வாகனங்கள் தொடர்ந்து வந்தபடி இருந்ததால், குட்டியை துாக்கி கொண்டு கோவிலின் படிக்கட்டுக்கு சென்றன. அங்கு அந்த குட்டி குரங்கை, ஒவ்வொரு குரங்கும் எழுப்ப முயற்சி செய்தன. ஐந்தறிவு ஜீவன்களின் பாசப் போராட்டம், அங்கிருந்த பக்தர்களை மனவேதனை அடைய செய்தது. பழநி வனத்துறையினர், குரங்கு கூட்டத்தை விரட்டி விட்டு, கொடைக்கானல் சாலை தேக்கந்தோட்டம் வனப்பகுதியில் இறந்த குட்டியை அடக்கம் செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.