Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

கணக்கில் காட்டாத வருவாயை வெளியிட கடைசி வாய்ப்பு: வானொலி உரையில் மோடி அறிவுறுத்தல்


செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கணக்கில் காட்டாத வருவாயை வெளிப்படுத்துமாறும், இதுவே கடைசி வாய்ப்பு என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தாங்களாகவே முன்வந்து கணக்கில் காட்டப்படாத தொகையை கணக்கில் கொண்டு வந்து சமர்ப்பித்தால் வருவாயின் ஆதாரம் என்ன என்ற கேள்விகள் கேட்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

'மன் கீ பாத்' என்ற வானொலி உரையில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி கூறியதாவது:

"கணக்கில் காட்டாத சொத்து, பணம் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து விவரங்களை வெளியிட அரசு செப்டம்பர் 30-ம் தேதியை இறுதிக் கெடுவாக நிர்ணையித்துள்ளது. அபராதம் மட்டும் செலுத்துவதுடன் இந்த கணக்கில் வராத பணம் என்ற சுமையிலிருந்து வெளிவந்து விடலாம்.

கணக்கில் காட்டப்படாத வருவாயின் ஆதாரம் குறித்து எந்தவித கேள்வியும் விசாரணையும் இல்லை என்று நான் ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறேன். எனவே வெளிப்படையான ஒருங்கின் கீழ் இணைவதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்று இதனால்தான் நான் கூறிவருகிறேன்.

நாட்டு மக்களுக்கு நான் கூறுவது என்னவெனில் இந்த வாய்ப்பு செப்டம்பர் 30-ம் தேதி வரை உள்ளது. இதையே கடைசி வாய்ப்பாகக் கருதவும்.

நான் பாஜக எம்.பி.க்களிடம் தெரிவித்து விட்டேன், செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பிரச்சினையில் சிக்குபவர்களுக்கு எந்த ஓர் உதவியும் கிட்டாது என்று.

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வரிவிதிப்பு விதிமுறைகள் முன்பு வரியை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டிருந்தன. ஆனால் மெதுவே தற்போது அத்தகைய காலம் மாறிவிட்டது. தற்போது வரிசெலுத்துவோர் அரசின் விதிமுறைகளின் நடப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால் இன்னமும் கூட சிலர் வரியை தவிர்ப்பது நல்லது என்று உணர்ந்து வருகின்றனர்.

என்னுடைய கோரிக்கை என்னவெனில், விதிகளிலிருந்து ஓடி ஒளிவதால் நாம் நம் நிம்மதியை இழக்கிறோம். எந்த ஒரு சிறு மனிதனும் நம்மை துன்புறுத்துவார். அதற்கு நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? நாமே ஏன் மனமுவந்து நம் வருவாய் குறித்த சரியான தகவலை அரசுக்கு தெரிவிக்கக் கூடாது? எனவே நாட்டு மக்கள் இதிலிருந்து விடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு 'மன் கீ பாத்' உரையில் மோடி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.