Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

மோர் - 1 கப்
தேங்காய் - சிறிதளவு
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.