புதுச்சேரியில், சாராயக் கடையை சூறையாடிய, என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ., உட்பட, 43 பேரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கவுண்டம்பாளையம், வழுதாவூர் சாலையில், சாராயக் கடை உள்ளது. இதனருகே மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இதனால், இங்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், மாதர் சங்கத்தினர் இக்கடையை சூறையாடினர். அதன்பின்னும், கடை இடம் மாற்றப்படவில்லை. ஆனால், மாதர் சங்கத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், சாராயக் கடையை அகற்றக் கோரி, கலால் துறைக்கு மனு கொடுத்தார். 'அடுத்த முறை அந்த கடையை ஏலம் விடும்போது, வேறு இடத்திற்கு மாற்றி விடுவோம்' என, அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், கடையை இடம் மாற்றாமல், அதே இடத்தில் நடத்த, நேற்று ஏலம் நடந்துள்ளது. இதையறிந்த அசோக் ஆனந்த், தொகுதி மக்களுடன் சென்று, சாராயக் கடையின் பெயர் பலகையை உடைத்து, அங்கிருந்த, 'குடி'மகன்களை வெளியேற்றி, கடைக்கு பூட்டு போட்டார்.
தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, ராஜிவ் சதுக்கம் நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், எஸ்.பி., ரட்சனா சிங் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தினர். கலால் துறை அதிகாரிகள் வர வேண்டும் என, எம்.எல்.ஏ., போராட்டத்தை கைவிட மறுத்தார். இதையடுத்து, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., உள்ளிட்ட, 43 பேரை, போலீசார் கைது செய்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.