கர்நாடகாவில், பலர் முன்னிலையில், மனைவியை முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் அடித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, பா.ஜ.,வை சேர்ந்த குமாரசாமி, முடிகிரே தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். இவரது மனைவி சவிதா, மாநில அரசில், உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
பிரிந்து சென்றார் : ஹாசனை சேர்ந்த பெண் ஒருவருடன், குமாரசாமிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட, 'சிடி' ஒன்று, கடந்த, ஆறு மாதத்துக்கு முன் வெளியானது. இதனால், கோபம் அடைந்த சவிதா, கணவனை விட்டு பிரிந்தார். குமாரசாமியும், பெங்களூரில் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியில், கடந்த ஆறு மாதமாக தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம், குமாரசாமி தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கு மனைவி சவிதா வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும், போலீசாரும் வந்திருந்தனர். மனைவியை பார்த்த குமாரசாமி, அவருடன் பேசுவதை தவிர்த்து, காரை நோக்கி சென்றார். இதை பார்த்த சவிதா, வேகமாக சென்று, காரில் இருந்த சாவியை எடுத்து கொண்டார். இதையடுத்து கோபம் அடைந்த குமாரசாமி, பலர் முன்னிலையில், சவிதாவை சரமாரியாக அடித்தார். போலீசார், தடுத்து, இருவரையும் பிரித்தனர். பின்னர், இருவரையும், காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கும், மனைவியை குமாரசாமி அடித்துள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த சவிதாவின் குடும்பத்தினர், குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
குடும்ப விவகாரம் : இது பற்றி சவிதா கூறுகையில், 'இது எங்களின் குடும்ப விவகாரம்; கணவன் மீது புகார் கொடுக்க விரும்பவில்லை. பிரச்னையை பேசி தீர்த்து கொள்வோம். என் கணவனிடம் இருந்து விலகுமாறு, அந்தப் பெண்ணை எச்சரிக்கவே, கணவனை பார்க்க வந்தேன்' என்றார். ஆனால், குமார சாமி, எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.