Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

குழந்தைகளுக்கு விருப்பமான மினி பிட்சா


தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

மேலே தூவ...

பிட்சா சாஸ் - 1/4 கப்
காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
சீஸ் - 1 கப் (துருவியது)
சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
ஓரிகானோ - தேவையான அளவு

செய்முறை:

* பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, அதனுடன் கலந்து வைத்துள்ள ஈஸ்ட் தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைத்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி (முள் கரண்டி) கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* இதனை பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான மினி பிட்சா ரெடி!

* இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.