Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

சுமேரியர் கால சுவையான பீர் தயாரித்த ராணுவ வீரர்!


ஜெருசலேம்: பைபிள் காலத்திற்கும் முந்தைய சுமேரியர் கால சுவையான பீர் ஒன்றை ராணுவ வீரர் ஒருவர் தயாரித்துள்ளார்.

பைபிள் காலத்திற்கும் முன்பு வாழ்ந்த சுமேரியர்கள், தானியங்களைக் கொண்டு புளிப்பு சுவை கொண்ட புதுவித பானத்தை (பீர்) தயாரித்து, முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்தனர். ஆனால், தற்போது அந்த பீர் நடைமுறையில் இல்லை.

இந்நிலையில், ராணுவ வீரர் ஒருவர் அதேபோன்ற தானியங்களைக் கொண்டு, அதே சுவையுடன் கூடிய பீரை தயாரித்துள்ளார். இது பல்வேறு தரப்பினரிடம் பாராட்டை பெற்றுள்ளது.

ஜெருசலேமைச் சேர்ந்த ராணுவ வீரர் குத்மேன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு தேவையான பீரை தயாரித்து பயன்படுத்தி வந்தார். இதையடுத்து, அவருக்கு சுவையான பீர் தயாரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, சுமேரியர்கள் கால சுவையான பீர் ஒன்றை தயாரித்துள்ளார்.

இதற்காக குத்மேன், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிறப்பு கோதுமையை போன்று மரபணு கோதுமையை விதைத்து, பல மாதங்கள் உழைத்து அறுவடை செய்துள்ளார். அதனுடன் ஹாப்ஸ், ஈஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்ந்து, பீர் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த பீர், சுமேரியர்கள் காலத்து பீர் போன்று புளிப்பு சுவையுடன் இருந்திருக்கிறது. மேலும், இவர் விளைவித்த கோதுமையில் இருந்து 16 லிட்டர் பீர் கிடைத்திருக்கிறது.

குத்மேன் தயாரித்த பீர் குறித்து தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதேப்போன்ற பீரை தயாரித்து தங்களுக்கும் தருமாறு ஏராளமானோர் குத்மேனிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், ''தற்போது தான் தயாரித்திருக்கும் பீரை விற்பனை செய்யவோ அல்லது அதற்கான சூத்திரத்தை பகிர்ந்து கொள்வதற்கோ  தாம் தயார் இல்லை'' என குத்மேன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.