Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

மேட்டூர் அரசு மருவமனையில் அறுவை சிகிச்சை செய்த 18 பேருக்கு கண் பார்வை பாதிப்பு!


மேட்டூர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்தவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் லட்சுமி, சின்னதம்பி, சரோஜா, பாக்கியம், பார்வதி, ராஜலிங்கம் உட்பட 23 பேர், கடந்த சில சில நாட்களுக்கு முன்பு, கண்புரை காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சைக்கு பின் மருந்து கொடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

வீட்டிற்கு வந்த அவர்கள், மருந்து போட்டபோது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கண்ணில் சீழ் வைத்தது. இதனையடுத்து அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 'சூடோ மோனாஸ்' என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு கோவை, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கண்பார்வை திரும்ப கிடைக்குமா என்பது குறித்து டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகளை மேட்டூருக்குச் சென்று நேரில் விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். அதையடுத்து, அதிகாரிகள் மேட்டூரில் முகாமிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
அரசு மருத்துவமனையில் எலி கடித்து பச்சிளம் குழந்தை பலி! அரசு மருத்துவமனையில் 7 நாளில் 35 குழந்தைகள் உயிரிழப்பு: இந்தியாவில்தான் இந்த கொடுமை! அவசர காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க எஃப்ஐஆர் தேவையில்லை! ஏழைகள் நலனுக்காக மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி ! இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.