வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன பயன் தரும் பாகங்கள். வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், தாய்ப்பாலை பெருக்கும். தீப்புண்ணை ஆற்றும். மது மேகத்தை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளை பழுத்து உடையச் செய்யும். வலியை போக்கும் சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும், உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும். ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேக வைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.
வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். வெந்தயப் பொடியால் மேகம் குணமாகும். வெந்தயத்துடன் சமன் சீமையத்தியின் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாக குறையும்.
தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருத்தரிக்காது. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊற வைத்துத் தலை முழுகினால் பலன் கிடைக்கும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும், பருவும் குணமடையும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.