Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

தோழிக்கு மருத்துவப் படிப்புக்கான இடத்தை விட்டுக்கொடுத்த மாணவி


சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் தனது தோழிக்காக மருத்துவ இடத்தை மாணவி ஒருவர் விட்டு கொடுத்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நட்புக்கு  ஓர் சிறப்பினை கூறும் வகையில் அமைந்துள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியில் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான மருத்துவ படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த மாணவி வர்ஷிணி கலந்தாய்வில் பங்கேற்காமல் தனது நெருங்கிய தோழியான, ஜனனிக்கு விட்டுக்கொடுத்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது தோழி ஜனனி ஓசி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இடம் கிடைக்காது என்றும், அதற்காக அவருக்கு இந்தக் கலந்தாய்வில் விட்டுக்கொடுத்துவிட்டதாகவும் வர்ஷனி கூறினார். அவர் பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வில் பங்கேற்கப் போவதாகவும், நட்புக்காகவே கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கவில்லை என வர்ஷனி தெரிவித்துள்ளார். அவர் நாளை நடக்கும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.