Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

க்விஸ்-என்றால் என்ன


க்விஸ் போட்டியில், க்விஸ் என்ற வார்த்தை தோன்றிய விதத்தை பார்ப்போமா!

மிண்டனில் ஜேம்ஸ் டேலி என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். இவர் நாடக தியேட்டரை சொந்தமாக வைத்திருந்தார். இவருக்கு ஆங்கில பேராசிரியர் ஒருவர் நண்பராக இருந்தார்.
ஒருமுறை இவர்கள் பேசி கொண்டிருந்தபோது, பேராசிரியர் ""மொழிகளும், வார்த்தைகளும் வேறுநாட்டு மொழியிலிருந்து கொஞ்சம் வேறுபட்டுதான் புதிதாக உருவாகிறதே தவிர, ஒரு வார்த்தை கூட நேரடியாக வந்தது இல்லை,'' என்றார்.
அதற்கு டேலி, ""ஏன் வரவில்லை?'' என்று கேட்டார்.
""நடைமுறையில் பேசப்பட்டு, வருவதையே நாம் பழக்கமாக்கி கொண்டுள்ளோம். அதனால், ஒரு புதிய வார்த்தையை கூட உருவாக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது!'' என்றார் பேராசிரியர்.
""உருவாக்க முடியும். நீங்கள் யாரும் முயற்சிக்கவில்லை,'' என்றார் டேலி.
""நானே ஒரு ஆங்கில பேராசிரியர். பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுதான் இந்த கருத்தை சொல்கிறேன். நீங்கள் ஒரு நாடக தியேட்டர் உரிமையாளர். உங்களுக்கு மொழிகளை பற்றி என்ன தெரியும்!'' என்றார்.
""என்னாலும் வார்த்தையை உருவாக்க முடியும். நான் உருவாக்கி காட்டுகிறேன்,'' என்றார் டேலி.
உடனே லண்டனில் உள்ள 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கொஞ்சம் பேரை அழைத்து, அவர்களை தெருக்களில் உள்ள சுவரில், Q,U,I,Z என்று எழுத சொன்னார்.
அவர்களும் எழுதினர். மக்கள் அனைவரும் அந்த எழுத்தை வார்த்தையாக "க்விஸ்' என்று படித்தனர். ஆனால், அப்படியென்றால் என்ன? என அவர்களுக்கு தெரியவில்லை. பிள்ளைகளிடம் கேட்டனர். அவர்கள் டேலி என்பவர்தான் இப்படி எழுத சொன்னார் என்றனர்.
உடனே மக்கள் டேலியிடம் "க்விஸ்' என்றால் என்ன? என்று கேட்க, அவர் "க்விஸ்' என்றால் என்ன? என்று கேட்டீர்கள் அல்லவா அதற்கு பொருள் என்ன என்று கேட்பதே என்றார். இப்படிதான் "QUIZ' என்ற வார்த்தை தோன்றியது செல்லூஸ்! எப்படி?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.