Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்


தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1 (தட்டிக் கொள்ளவும்)
பாதாம் - 4
பிஸ்தா - 6
குங்குமப்பூ - சிறிது

செய்முறை :

* பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும்.

* அடுத்து அதில் குங்குமப்பூ கலந்த பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான மசாலா பால் ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.