Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

மணவாழ்க்கை இனிக்க சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம்


காதல்... எல்லோருக்கும் எல்லா வயதிலும் தேவையான உணர்வு. அறிவியல்பூர்வமாக ஆராயப்படாத ஓர் உணர்வும் கூட. ‘மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடம் அம்மாக்கள் முதலில் செல்லமாக இருப்பார்கள். ஆனால், பெறுகிற பிரியத்துக்கேற்ற எதிர்வினையை குழந்தைகளால் ஆற்ற முடிவதில்லை.

இதனால் காலப்போக்கில் அம்மாக்களுக்கு குழந்தைகளின் மீதான ஈடுபாடு குறைந்துவிடுகிறது. அதே போல, குழந்தைகள் பிரியமாக இருந்து, அம்மாக்கள் அதை கவனிக்காமல், அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள்.

இது போல காதலிலும் சரியான எதிர்வினை இரு பக்கமும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டும் மற்றவர் எதிர்வினை ஆற்றாமலும் இருந்தால் எப்படி அந்தக் காதல் வளரும்? எத்தனையோ காதல்கள் மோதலில் முடிவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

காதலில் ஒருவர் மற்றவரை குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுப்பது அவசியம். ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்பதெல்லாம் பொய். முதல் பார்வையில் காதல் வருவது என்பதும் உண்மையல்ல. அப்படி வருவது ‘பிசிக்கல் அட்ராக்ஷன்’ எனும் உடல் கவர்ச்சியில் சேரும். முதல் சந்திப்புக்கு பிறகு நன்கு பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து வருவதே உண்மையான காதல்.

அது ஆணோ, பெண்ணோ... தங்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான, சிறந்த ஒரு Companion ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுதான் காதல் இணை. பல விஷயங்களை காதல் இணையுடன் மட்டுமே நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ள முடியும். காதலர்கள் தங்களுக்குள் பிரச்னைகள் வராமல், சுமுகமாக இருக்க சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

ஒருவர், எல்லாவற்றிலும் தனது துணை சரியாக (Perfection) இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்துப் போவது அவசியம். உங்கள் துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் கூட துணையின் இணக்கமும் சம்மதமும் இருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும்.

அவர் உங்களுக்காகவே படைக்கப்பட்டவராக நினைத்து ஆதிக்கம் செலுத்தக் கூடாது. காதலிக்கும் போது இருக்கும் தீவிரம் திருமணத்துக்குப் பிறகும் இருக்க வேண்டும். இருபதோ, அறுபதோ... எந்த வயதிலும் உங்களுக்கு துணையின் மேல் காதல் இருக்குமானால் உங்கள் இல்லற வாழ்க்கையில் என்றென்றும் ஆனந்தமே!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.