சென்னை அரும்பாக்கம் பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கூவம் ஆற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தார்.
சென்னை முகப்பேர் ஜெயபாரதி குடியிருப்பைச் சேர்ந்தவர் இன்ஃபான்டோ (20). பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இன்ஃபான்டோ, ஞாயிற்றுக்கிழமை மாலை முகப்பேரில் இருந்து பாரிமுனை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக இன்ஃபான்டோ இரு சக்கர வாகனத்தைத் திருப்ப முயன்றார். அப்போது, நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம், அருகே இருந்த கூவம் ஆற்றின் பாலத்தின் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்தார்.
இதில் அவருக்கு தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்ஃபான்டோவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.