Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!


புதுடெல்லி: படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.

கேரளா மாநிலம், கோழிக்கோடு கலெக்டராக இருப்பவர் என்.பிரசாந்த். இவர் அங்கு பல்வேறு மக்கள் பணிகள் செய்து நல்ல பொதுமக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், தற்போதும் ஒரு செயல் புரிந்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.

அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு தங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொரு மானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.

ஏற்கனவே, பல்வேறு சமூக பணிகளின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலெக்டர் என்.பிரசாந்த்துக்கு, தற்போது மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்ததற்காகவும் பாராட்டு குவிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.