" இந்த யானையோட அட்டகாசத்துக்கு ஒரு அளவில்லாம போயிடுச்சே...எப்போதான் இது தொலைஞ்சு போகுமோ...?!" என்று நேற்றுவரை வயிற்றில் புளி கரைய புலம்பிக்கொண்டிருந்தவர்கள் கோவை மாவட்டம், மதுக்கரை மக்கள். அவர்களின் புலம்பலுக்கு காரணம், கடந்த 6 மாதங்களாக அவர்கள் வீடுகளை, வயல்களை, பொருட்களை நாசம் செய்து வந்ததாக கூறப்பட்ட ஒரு யானை. 'மதுக்கரை மகாராஜ்' என்ற அந்த யானைக்கு அப்பகுதிமக்கள் என்று பெயர் சூட்டியிருந்தது வேறு கதை.
இந்நிலையில் யானையின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் கொடுக்க, மகாராஜை வளைக்க 'மிஷன் மதுக்கரை மகாராஜ்' நடத்தியது வனத்துறை. கும்கி யானைகளின் உதவியுடன் காட்டிலிருந்து வெளியே வரவழைக்கப்பட்ட மகாராஜ்க்கு, மயக்க ஊசியை சரியான அளவில் கொடுக்காததால் மயக்க நிலையிலேயே இறந்தது.

வனத்துறையால் பிடிக்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டு யானை மகாராஜ் இறந்த தகவல் மதுக்கரை மக்களிடம் பரவிய அந்த நேரத்திலிருந்து ஊரே மயான அமைதியாகிவிட்டது. எல்லார் முகங்களிலும் தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த சோகம் அப்பிக்கிடந்தது.
கடந்த 6 மாதங்களாக, யானையால் அடைந்த தொந்தரவுகளால் அதற்கு 'கட்டையன்' என பெயரிட்டிருந்தனர் அப்பகுதி மக்கள். 6 மாதங்களாக அவர்களின் உதடுகளில் உலவிய அந்த கட்டையன், இன்று உயிரோடு இல்லை என்பது அவர்களின் வருத்தத்தை அதிகப்படுத்திவிட்டது. இப்போது இறந்துபோன மகாராஜ்க்கு ஊர் மக்கள் சுவரொட்டி மூலம் உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அந்த சுவரொட்டியில், “நீ இந்த காட்டை விட்டுப் போவாய் என்று நினைத்தோம்...இந்த மண்ணை விட்டு அல்ல”...என்று எழுதப்பட்ட வரிகள் தங்களுக்கு தொந்தரவு அளித்தபோதும் ஒரு விலங்கின் மீதான மனிதர்களின் பரிவை சொல்வதாக உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.