Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

நான்கு வருட குப்பையை ஒரு ஜாடிக்குள் அடக்கிய லாரன்!


ப்ரூக்லினை சேர்ந்த 25 வயது தொழிலதிபர் லாரன் சிங்கர். லாரன் சிங் இப்போது அங்கு சிலாகித்து பேசப்படும் நபராகியிருக்கிறார். அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் என்கிறீர்களா...நான்கு வருடங்களாக, தன்னிடம் சேர்ந்த குப்பைகளை ஒரு ஜாடிக்குள் அடைத்து விட்டார். எப்படி ஒருவருக்கு 4 வருடத்தில் இவ்வளவு குறைவாக குப்பை சேர்ந்தது?

“நான் ஒரு முறை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து, ​என் பாத்ரூமை திறந்தபோது அங்கு பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்களே நிறைந்துகிடந்தன. வீட்டை ஆராய்ந்ததில் மற்ற பொருட்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளே கிடந்தன. அப்போதுதான் 'ஏன் என் வீடு பிளாஸ்டிக் இல்லாத வீடாக​ இருக்கக்​கூடாது' என்று தோன்றியது.

மக்கள் எல்லோரும் “நோ பிளாஸ்டிக்” சபதம் எடுத்து ப்ரூக்லினில் தோற்றுப்போய்​கொண்டிருந்தார்கள். நான் இதை சவாலாக எடுத்துக்கொண்டேன். அப்போது என் டூத்பேஸ்ட் தீர்ந்தசமயம். முதலில் என் முயற்சியை அதிலிருந்துதான் துவங்கினேன். நானே கூகுள் பார்த்து டூத்பேஸ்ட் தயாரித்தேன்.​ அத்துடன் பேஸ்ட் டியூப் குப்பை சேர்வது நின்று போனது.​



அடுத்து டிடர்ஜன்ட் பவுடர் தயாரித்தேன். அந்த பாக்கெட் குப்பையும் ​நின்று போனது. சோப், பர்ஃபியூம் என அடுத்தடுத்து அனைத்தையும் நானாக தயாரிக்க ஆரம்பித்தேன். சில மாதங்களில் இப்படியே ஒவ்வொன்றாய் தயாரித்து வீட்டில் துளி பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றினேன். சேர்ந்த சிறு சிறு பிளாஸ்டிக் குப்பைகளை வெளியே கொட்டாமல் ஒரு ஜாடிக்குள் அடைக்க ஆரம்பித்தேன். நான்கு வருடங்கள் கழித்தே ஜாடி நிரம்பியது” என்கிறார் பெருமையாக லாரன். இப்போது லாரனின் வீடு 'பிளாஸ்டிக் ஃப்ரீ வீடு'.

படிப்பு முடித்ததும் நியூயார்க் மாகாணம் சுற்றுச்​சூழல் துறையில் லாரனுக்கு வேலை கிடைத்தது. சிறிதுகாலம் அங்கு வேலை செய்துவிட்டு இப்போது இயற்கையாக, பிளாஸ்டிக் கலக்காமல், “தி சிம்ப்ளி கோ” என்னும் டிடர்​ஜெ​ன்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் இதன் மூலம் மக்களிடையே “நோ பிளாஸ்டிக்” விழிப்பு உணர்வு பெரிதும் சென்றடைந்துள்ளதாக பூரிக்கிறார்.



பிளாஸ்டிக்கை தவிர்த்த வெற்றிகரமான மனிதரான லாரன் நம் வீட்டை 'பிளாஸ்டிக் ப்ரீ' யாக மாற்ற மூன்று எளிய வழிகளை சொல்லுகிறார்.

1. ரெகுலராக என்னவெல்லாம் நீங்கள் குப்பையில் போடுகிறீர்கள் என்று உங்கள் குப்பைத்
​ ​தொட்டியை ஆராய​ தொடங்குங்கள்.

2. சிம்பிளாக உள்ளவற்றை, அதேசமயம் பெரிதும் குப்பை சேரும் பொருட்களை மாற்றுங்கள். உதாரணத்திற்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை நீக்கிவிட்டு உலோக பாட்டில்களை​ வைக்கலாம்.

3.  பிறகு உங்களுக்கு தேவையான பொருட்களை,​ நீங்களே உருவாக்குங்கள். இதை நீங்கள் சமைப்பது போன்று​ நினைத்துக்​ கொள்ளுங்கள். கடினமாக இருக்காது.


http://www.trashisfortossers.com/ என்னும் தனது வலைப்பக்கத்தில் இது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் லாரன். மேலும் எந்த பொருட்களையெல்லாம் எப்படி பிளாஸ்டிக் ஃப்ரீயாக மாற்றலாம் என்று டிப்ஸும் கொடுக்கிறார் லாரன்!

என்ன மக்களே....லாரன் சொன்னவற்றை பின்பற்றத்துவங்கிவிட்டீர்களா...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.