கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாழும், பழங்குடியின மக்கள் பலர், மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்;
இதனால், இவர்களின் குழந்தைகளுக்கு சத்தான உணவு; கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகி யுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தினசரி கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்தும் இவர்களில் பலர், மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், சிறுவர் முதல்பெரியவர்கள் வரை, அனைவரின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.நாள்தோறும், குடும்பத்துடன் மதுக்கடைக்கு வரும் இவர்கள், தாய், தந்தை, மகள், மகன், மருமகள் என வேறுபாடின்றி, மதுவை வாங்கி அதே இடத்தில் அமர்ந்து, தண்ணீர் கூட கலக்காமல் குடித்து வருகின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும், 'டாஸ்மாக்' மதுக்கடைக்கே செல்கிறது. இதனால் பல நாட்கள், பட்டினியுடன் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆதிவாசிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் கூறுகையில், ''பழங்குடி மக்கள், மதுவை அதிகமாக குடிப்பதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, இறப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. மதுவுக்கு இளைஞர்களே அதிகமாக அடிமையாகி வருவதால், திருமண பந்தங்களும் நிலைப்பதில்லை. குழந்தை பிறப்பும் குறைந்து வருகிறது.
அரசு உரிய ஆலோசனை மையங்களை திறந்து, இவர்களை காப்பாற்ற வேண்டும்,” என்றார். காட்டுநாயக்கர் சமுதாய பெண் தலைவி மர்ஜி கூறுகையில், "பழங்குடியின மக்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும், குடிப்பதற்கு செலவிடுவதால், குழந்தைகளுக்கு சத்தான உணவு; கல்வி கிடைக்காத சூழல் உள்ளது. அழிவின் பிடியில் உள்ள பனியர் இன மக்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன்வர வேண்டும்,” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.