Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

ஆபிரகாம் லிங்கன், ஜான் எப் கென்னடி மரணத்தில் ஒளிந்திருக்கும் திகைக்க வைக்கும் உண்மைகள்!


அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகளுள் லிங்கன் மற்றும் கென்னடி குறிப்பிடத்தக்கவர்கள். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவரும் சிவில் ரைட்ஸ்காக குறிப்பிட்டு கூறும் வகையில் பணியாற்றியது. மேலும், இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

இருவருக்குள், இரு நிகழ்வுகளுக்குள் ஒரே மாதிரியான கருத்து, நடவடிக்கை, போன்றவைகள் தோன்றினால் அதை நாம் தற்செயலாக நடப்பது என கூறுவோம். ஆனால், இருவருக்குள் பல விஷயங்கள் தற்செயலாக அமைவது நம்மை திகைப்படைய வைக்கும்.

அந்த வகையில் காங்கிரஸில் தேர்வானதில் இருந்து இறந்தது வர பல தற்செயல் சம்பவங்களை கொண்டிருக்கும் இருபெரும் நபர்களான லிங்கன் மற்றும் கென்னடி பற்றி இனி பார்க்கலாம்…

உண்மை #1
ஆபிரகாம் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846-ல். கென்னடி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்டது 1946-ல்.

உண்மை #2
லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது 1860-ல். கென்னடி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது 1960-ல்.

உண்மை #3
இருவரின் மனைவியரும் வெள்ளை மாளிகையில் இருந்த போது தங்கள் குழந்தையை இழந்தனர்.

உண்மை #4
இருவரும் தலையில் சுடப்பட்டு தான் கொல்லப்பட்டனர். குறிப்பாக இருவரையும் சுடப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை.



உண்மை #5
இருவருமே சிவில் ரைட்ஸ்காக குறிப்பிட்டு திகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதிகள் ஆவர்,

உண்மை #6
லிங்கனின் செயலாளர்பெயர் கென்னடி. கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #7
இருவருமே தெற்கு பகுதியை சேர்ந்த ஜான்சன் என்ற பெயரில் எதிர்த்து போட்டியிட்டவர்களை வென்றவர்கள்.

உண்மை #8
லிங்கன் ஃபோர்ட் எனும் தியட்டரில் இறந்தார். கென்னடி ஃபோர்ட் நிறுவனம் தயாரித்த லிங்கன் எனும் காரில் இறந்தார்.

உண்மை #9
சுடப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு லிங்கன் மன்றோ எனும் நபருடன் இருந்தார். கென்னடி சுடப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மர்லின் மன்றோவுடன் இருந்தார்.

உண்மை #10
லிங்கனை சுட்டவன், தியேட்டரில் இருந்து சுட்டப் பிறகு தப்பிக்க ஓர் கிடங்குக்குள் ஓடினான். கென்னடியை சுட்டவன், கிடங்கில் இருந்து சுட்டப் பிறகு தப்பிக்க தியட்டருக்குள் ஓடினான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.