இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீடிப்பது குறித்தும், வருங்காலம் குறித்தும் கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் ஹராரேயில் வரும் 11, 13, 15 ஆகிய தேதிகளிலும், 20 ஓவர் போட்டி அதே மைதானத்தில் 18, 20, 22 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அணியில் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இருந்து நேற்று ஜிம்பாப்வே புறப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களுக்கு கேப்டன் தோனி அளித்த பேட்டியில், இந்த போட்டி தொடர் எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏறக்குறைய ஒரே பிரிவு வீரர்களுடன் நான் விளையாடி வந்து இருக்கிறேன். இந்த போட்டி தொடரில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுடன் தற்போது தான் முதல்முறையாக இணைந்து விளையாட உள்ளேன். எனவே வீரர்களின் பலம், பலவீனத்தை விரைவில் ஆராய்ந்து அதற்கு தகுந்த படி அணியில் வீரர்களை இடம் பிடிக்க செய்ய வேண்டியது அவசியமானதாகும். முடிந்த அளவுக்கு சரியான இடத்தில் உரிய நபர்களை பயன்படுத்த வேண்டும். அணியின் ஒருங்கிணைப்பு நேர்த்தியாக அமைந்தால் அணி நன்றாக இருக்கும்.
சர்வதேச போட்டியில் விளையாடுவது என்பது சிறிது வித்தியாசமானதாகும். இந்திய அணிக்காக விளையாடுகையில் வித்தியாசமான நெருக்கடி இருக்கதான் செய்யும். அத்துடன் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். எனது வருங்காலம் குறித்து கேட்கிறீர்கள்.
நான் எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடி வருகிறேன். கேப்டன் பதவியில் தொடர்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய முடியும். இந்த விஷயத்தில் நான் முடிவு செய்ய முடியாது.
இந்திய அணியின் பயிற்சியாளராக சிறந்த நபரை நியமிக்க வேண்டும். அவர் நமது கலாசாரத்தை நன்கு புரிந்தவராக இருக்க வேண்டும். இந்தி பேச தெரிந்து இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. ஆங்கிலத்தில் வீரர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை" என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.