வேண்டும் என்றே வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்கள் மீது மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
வரி ஏய்ப்பு செய்வோரின் பெயர்கள் மற்றும் சுய விவரங்களை வருமான வரித் துறை இணையதளப் பக்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதன் பிறகும் பலர் வேண்டுமென்ற வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வருமான வரிக் கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சிறைத் தண்டனை பெற வகை செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் சமையல் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படும், பான் அட்டை முடக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தபோது, ''வேண்டுமென்றே வரி செலுத்தாத 63 நபர்களின் பெயர்கள் வருமான வரித் துறை மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தேடப்பட்டு வரும் நபர்களும் அடங்குவர். அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு சில பிரச்னைகளால் வரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. அதேபோல், வரி செலுத்தாத அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.