Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

புழலில் பட்டப்பகலில் பயங்கரம் சென்னை ஐகோர்ட் வக்கீல் சரமாரியாக வெட்டி கொலை


புழல் காவாங்கரை சங்கரலிங்கனார் தெருவை சேர்ந்தவர் அகிலன் (எ) அகில்நாத் (32). திருமணமாகவில்லை. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர், புழல் நகர முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர். நேற்று பகல் 12 மணி அளவில் அகிலன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது 3 பைக்கில் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அகிலனை சுற்றி வளைத்து கழுத்து, தலை, மார்பு, கை, கால்களில் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அகிலன் இறந்ததை உறுதி செய்ததும் கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது.

சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அகிலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது கட்டப்பஞ்சாயத்து காரணமாக நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக அருகில் உள்ள அடகு கடை மற்றும் அரசு சோதனை சாவடிகளில் உள்ள வெப் கேமரா, காவாங்கரை ஜிஎன்டி சாலையில் உள்ள வெப் கேமராக்களை ஆய்வு செய்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் காவாங்கரை டாஸ்மாக் கடையில் வெட்டி படுகொலை  செய்யப்பட்டார். இந்த வழக்கில் அகிலன் முன்ஜாமீன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. எனவே, படுகொலை செய்யப்பட்ட சிவராஜுடைய ஆட்கள்தான் அகிலனை தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும் அல்லது  கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கவேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலை நடந்த இடத்தில் பதற்றம் நீடிப்பதால் அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன.  தற்போது, குற்றவாளிகளை பிடிக்க மாதவரம் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வக்கீல்கள் தொடர் கொலை

கோடம்பாக்கத்தில் கடந்த வாரம் வக்கீல் முருகன் கூலிப்படையினராலும், சில நாட்களுக்கு முன் வடபழனியில் ஆந்திர வக்கீல் நாகேஷ்வரராவும் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, சென்னையில் வக்கீல்கள் கொலை செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.