மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், ‘சிக்ஸ் மெசின்: நான் கிரிக்கெட்டை விரும்புவதில்லை... அதை நேசிக்கிறேன்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்மான ஒரு நிகழ்வில், "சில வீரர்கள் தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். அதற்கு பிரையன் லாராவும் உதாரணம்.
2005ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த லாரா, அடிக்கடி பால்கனிக்கு வந்து ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்தபடி உள்ளே சென்றார். அச்சமயம் களத்தில் நான் தொடர்ந்து ரன்கள் குவித்து கொண்டிருந்தேன். டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்துள்ள லாராவின் (400 ரன்) உலக சாதனையை நான் நெருங்கியதால் ஒவ்வொரு முறையும் ஸ்கோரை பார்க்கும் போது அவர் கவலையுடன் சென்றுள்ளார். அவரது செயல்கள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த சர்வானுக்கு ஆச்சர்யமாக பட்டுள்ளது.
தேனீர், உணவு இடைவேளையில், நான் பெவிலியன் திரும்பிய போது, அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து இதே போல் விளையாடு.... அந்த மாதிரி அடி... என்று எந்த வித அறிவுரையும் வழங்கவில்லை. ஆனால் எனது ஸ்கோரை பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டார். அவரிடம், சாதனையை தகர்த்து விடுவேனோ என்ற கவலையும், பயமும் இருந்ததை காண முடிந்தது. முடிவில் இந்த டெஸ்டில் நான் 317 ரன்களில் ஆட்டம் இழந்து விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.