Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'



நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 33 சதவீத உணவு பொருட்கள், யாருக்கும் பயன் இல்லமல் குப்பையில் கொட்டப்படுகிறது. இதை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. ஆனால் கொச்சியை சேர்ந்த மினு பவுலின் என்ற பெண், இதிலும் வித்தியாசமாக யோசித்திருக்கிறா்.

கொச்சியில் ஓட்டல் நடத்தி வருகிறார் மினு பவுலின். தனது உணவக வாசலில் 420 லிட்டர் பிரிட்ஜ் வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத 50 மக்களுக்கு தினமும் உணவுகளை வைத்து விடுகிறார். இதற்கு நன்ம மரம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தினமும் 24 மணி நேரமும், இந்த பிரிட்ஜ் உணவு இருக்கும். எந்த நேரமும், மற்ற யாரும் உணவு வைக்கலாம். பசியில் வாடும் யாரும் எடுத்து சாப்பிடலாம். உணவு வைப்பதற்கு மினு வைக்கும் ஒரே நிபந்தனை, உணவை சரியாக கட்டி வைக்க வேண்டும். கெட்டுப்போன உணவுகளை வைக்கக் கூடாது. குளிர் சாதன பெட்டியில், ஒரு மார்கரும் வைக்கப்பட்டுள்ளது. இதைவைத்து, அதில் வைக்கப்படும் உணவு தேதி குறிக்கப்படும். இதன் மூலம் உணவை எடுப்பவர்கள், அதன் தரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பாக மினு பவுலின் கூறியதாவது: வயதான பலர், வீடில்லாமல், உணவுக்காக குப்பைகளில் தேடுவதைப் பார்த்தேன். பசியை போக்க பலர் வழியில்லாமல் தவிப்பது, என்னை பாதித்தது. இதற்காக அவர் தனது 'பப்படவட' உணவகத்தில், நன்ம மரம் என்ற உணவு வங்கியை துவக்கியதாக கூறினார்.

''தேவையில்லாத ஒருவர் உணவை எடுத்தால் என்ன செய்வது என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, ஏமாற்றுபவர்களை கடவுள் கவனித்துக்கொள்வார் என நினைத்து கொள்வேன்., நான் தினமும் பிரியாணி கொடுப்பேன் என கூறவில்லை. ஆனால், தினமும் உணவு இருப்பதை உறுதி செய்வேன். இங்கு தினமும் ஏதாவது இருக்கும். இதனால் யாரும் பசியால் வாட மாட்டார்கள் என நம்புகிறேன்'' எனவும் மினு கூறினார்.

இந்த குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்காக சிலர், அந்த உணவகத்திலேயே உணவு வாங்கி வைக்கின்றனர். இதற்கும் மனு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த திட்டத்தை வைத்து நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. தொண்டு நிறுவனத்தில் பணம் கொடுக்க வேண்டும் என இந்த திட்டத்தை துவக்கவில்லை. உங்களிடம் அதிகமாக உள்ள உணவை கொடுப்பதையே விரும்புவதாக கூறுகிறார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.