Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

ஒலிம்பிக் பதக்கம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜை மிரட்டிய விளையாட்டு துறை அமைச்சர்


கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன் தன்னை மிரட்டியதாக மாநில விளையாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள்  சர்வதேச தடகள வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனையான  அஞ்சு பாபி ஜார்ஜை கேரள விளையாட்டு கவுன்சில் தலைவராக உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அரசு நியமித்தது. இவர் பெங்களூரில்  சுங்க இலாகா துறை அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட  ஜெயராஜனை அஞ்சு பாபி ஜார்ஜ் மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஜெயராஜன் தன்னை அவமதித்து மிரட்டியதாக அஞ்சு  பாபி ஜார்ஜ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து புகார் கூறினார். இது குறித்து அஞ்சு பாபி  ஜார்ஜ் நேற்று கூறியதாவது:  கேரளாவில் புதிய விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயராஜனை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு  நான் சென்றேன். அப்போது விளையாட்டு துறையில் பணிபுரியும் சில ஊழியர்களை அவர்களது குடும்ப நலன்கருதி இடமாறுதல் செய்ய வேண்டுமென  கோரிக்ைக வைத்தேன். ஆனால் அந்த பட்டியல் முழுவதையும் நிராகரித்த அமைச்சர், என்னை மிரட்டும் தொனியில் பேசினார்.

விளையாட்டு கவுன்சிலில் அனைவரும் ஊழல்வாதிகள் என்றும் அவர் கூறினார். \மேலும் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என கருதினீர்களா? என்ன  நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் மிரட்டலும் விடுத்தார். இது எனக்கு மிகவும் அவமரியாதையாக இருந்தது. நான் பணிபுரியும்  பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் வர கடந்த அரசு எனக்கு அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பாகவும் அமைச்சர் ஜெயராஜன் மனம்  நோகும்படி கேள்விகளை கேட்டார். இனி விமானத்தில் ெசல்லக்கூடாது என்றும் கூறினார்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் அஞ்சு பாபி ஜார்ஜின் குற்றச்சாட்டை  மறுத்த அமைச்சர் ஜெயராஜன் அவரை தான்  மிரட்டவில்லை என தெரிவித்தார். முதல்வர் பினராய் விஜயன்  கூறுகையில், அஞ்சு பாபி ஜார்ஜிடம் அமைச்சர் அவமரியாதையுடன் நடந்து கொள்ளவில்லை. அவரது விமான பயணம் குறித்து  விளக்கம் கேட்டுள்ளார்.  அது எப்படி அவமரியாதையாகும். என்னை அவர் வந்து சந்தித்த போது அஞ்சு பாபி ஜார்ஜ் நடந்த விபரங்களை கூறினார். அப்போது அவர் அமைச்சர்  அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அஞ்சு பாபி ஜார்ஜை அரசியல் சார்புடையவராக நாங்கள் கருதவில்லை என்று நான் அவரிடம் கூறினேன்’ என்றார். இதற்கிடையே அமைச்சர்  ஜெயராஜனுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மாநில தலைவர்  சுதீரன் உள்பட பலரும் அமைச்சர் ஜெயராஜனுக்கு கண்டனம் ெதரிவித்துள்ளனர்.

கேரள அரசியலில் பரபரப்பு: முகமது அலி பற்றி சர்ச்சை

கடந்த ஜூன் 4ம் தேதி முன்னாள் சர்வதேச குத்துச்சண்டை வீரர் முகமது அலி மரணமடைந்தார். அப்போது ஒரு மலையாள தொலைக்காட்சியில் அமைச்சர்  ஜெயராஜனிடம் முகமது அலியின் மரணம் குறித்து கருத்து கேட்ட போது, ‘முகமது அலியின் மரணம் கேரளாவுக்கு பெரும் இழப்பாகும். அவர்  கேரளாவுக்காக பல பதக்கங்களை பெற்றுத்தந்துள்ளார்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அமைச்சர். அதன் பின்னர் தான் ஆள்மாறி கருத்து  ெதரிவித்ததாக  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு விளையாட்டு பற்றி அறிந்தவர் விளையாட்டு துறை அமைச்சர் ஜெயராஜன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.