காட்பாடி அருகே ரயில் நிலையத்தில் பலூனுடன் எலக்ட்ரானிக் பொருள் தரையிறங்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது. காட்பாடி அடுத்த முகூந்தராயபுரம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் வானில் இருந்து பலூனுடன் கூடிய வெள்ளைநிற மர்மபொருள் தரையிறங்கியது. அதில் சிறிய ஆண்டெனா பொருத்தப்பட்டிருந்தது. இதனால், ரயிலுக்கு வெடிகுண்டு வைக்க சமூகவிரோதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்நிலைய அதிகாரிகள் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்மபொருளை கைப்பற்றினர். அது ஜெர்மனிய எலக்ட்ரானிக் பொருளால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
எனவே, யாராவது வேலூர் மாவட்டத்தை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவியை பறக்கவிட்டனரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர், காட்பாடி ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அதில் இணையதள முகவரி பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்மூலம் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சம்பந்தப்பட்டது என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு துறையில் அந்த எலக்ட்ரானிக் பொருளை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் கூறுகையில், ‘இந்த எலக்ட்ரானிக் பொருள் காற்றழுத்தத்தை கணக்கிட இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வானில் பறக்கவிடப்படும். இது பல கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து செல்லும். இந்நிலையில், பலூனில் ஓட்டை ஏற்பட்டு காஸ் வெளியேறியதால் ரயில்நிலையத்தில் தறையிறங்கியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து அச்சமடைய தேவையில்லை’ என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.