தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, நேற்று, கரூரில் நடந்த மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில், எப்படி கும்பிடுவது என்பது குறித்து, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பாடம் நடத்தினார்.
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலராக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இதையடுத்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, கரூர் அருகே வெங்கமேட்டில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக, அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று காலை, 10:45 மணிக்கே வந்து காத்திருந்தனர். ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை வர தாமதம் ஆனது.
இதனால், அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள், சாலையில் நின்று கொண்டிருந்தனர். காலை, 11:15 மணிக்கு தம்பிதுரை வந்தார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்தார்.
அப்போது, 'சிலைகளுக்கு எப்படி மாலை அணிவிக்க வேண்டும்; போட்டோ எடுக்கும்போது, எப்படி போஸ் கொடுக்க வேண்டும்; எப்படி கும்பிட வேண்டும்' என, அமைச்சருக்கு, தம்பிதுரை பல அறிவுரைகளை வழங்கினார்.
அதை அப்படியே அமைச்சர் செய்து காட்டி, தம்பிதுரையிடம் சபாஷ் பெற்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.