Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

காகம் அமர்ந்ததால் தோஷம் புது கார் வாங்கினார் கர்நாடக முதல்வர்


காகம் அமர்ந்து காரைவிட்டு இறங்காமல் அரைமணி நேரத்துக்கு மேல் ஆட்டம் காட்டியதால் சனியின் உக்ரம் வக்கிரமாக இருக்கிறதோ என்று சந்தேகித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, அந்த காரை மாற்றிவிட்டு புது காரை வாங்கியுள்ளார். கர்நாடக முதல்வரின் இல்லம், பெங்களூருவில் கிருஷ்ணா என்ற பெயரில் உள்ளது. இதில் கடந்த 2ம் தேதி வழக்கபோல வீட்டின் முன்பு முதல்வர் சித்தராமையாவின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் வருவதற்கு சற்று முன், கார் மீது காகம் ஒன்று வந்து அமர்ந்தது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த காகத்தால் அங்கிருந்து நகர முடியவில்லை. இதனால் முன்புற கண்ணாடியிலேயே அரை மணிநேரம் அமர்ந்து இருந்தது. கார் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதை துரத்துவதற்கு முயன்றனர். ஆனால் காகம் நகரவேயில்லை. பின்னர் போராடி காகத்தை டிரைவர் விரட்டியடித்தார்.

இந்த சம்பவம் அனைத்து மீடியாக்களிலும் வைரலாக பரவியது. காகத்தை சனீஸ்வரனாக பாவிப்பதால், சனி பகவான், உக்கரபார்வை முதல்வர் மீது விழுந்துவிட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வரும் என்று அரசியல் பிரமுகர்கள், கருத்து தெரிவித்தனர். அதற்கு ஏற்றார்போல பல்வேறு பிரச்னைகள் முதல்வர் சித்தராமையாவிற்கு வந்தது. இதனால் பதட்டம் அடைந்த முதல்வர் சித்தராமையா ஜோதிடரை அழைத்து, ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜோதிடர் காரை மாற்றிவிட்டால், சனி பகவானின் உக்ரபார்வையில்  இருந்து தப்பித்துவிடலாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதை ஏற்ற முதல்வர் சித்தராமையா, தலைமை செயலாளரிடம் புதிய கார் புக் செய்யும்படி கூறினார். அதன்படி டயோடோ பார்ச்சூனர் ரக காரை மாநில அரசு அவருக்கு புக் செய்தது. நேற்று முன்தினம் அந்த கார் முதல்வருக்கு வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.