Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

2 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ)


புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 1,50,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. தற்போது 2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை கெப்லர் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647பி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரிய அளவிலும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது.




புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.  அதே நேரத்தில் இது கியாஸ் நிரம்பிய கிரகம். எனவே இது வாழ தகுதியற்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் இங்கு பெரிய சந்திரன்கள் இருந்தால் வாழத் தகுதியான கிரகமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.