'அ.தி.மு.க.,வில் தவறு செய்தால், எந்த உயர் பதவியில் இருந்தாலும், அவர் துாக்கி எறியப் படுவார்; அதற்கு பயந்து, துரோகம் இழைக்க கட்சியினர் பயப்படுகின்றனர். தி.மு.க.,வில், கட்சிக்கு துரோகம் செய்தாலும் நடவடிக்கை இல்லை' என, தி.மு.க.,வினர் தங்கள் குமுறலை, சமூக வலைதளங்களில் கொட்டி தீர்த்துஉள்ளனர்.
சாயம் வெளுக்கும்: தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தன் முகநுால் பக்கத்தில், 'நீலகிரி அ.தி.மு.க.,வில் துரோகம் செய்த நிர்வாகிகளின் சொந்த ஓட்டுச்சாவடியில், தன் கட்சிக்கு விழுந்த ஓட்டுகளை ஆய்வு செய்து, கணக்கை நேர் செய்துள்ளார் ஜெயலலிதா. இந்த, 'பார்முலா'வை தி.மு.க., தலைமை கையாண்டால், பல துரோகிகளின் சாயம் வெளுக்கும்' என, குறிப்பிட்டு உள்ளார்.
தி.மு.க., மாநில பிரசார குழு செயலர் கண்மணி உட்பட, மகளிர் அணியின் மாநில நிர்வாகிகள் சிலர், அ.தி.மு.க.,வில் ஐக்கியமானதை விமர்சித்து, தி.மு.க.,வினர் பலர் வெளியிட்டுள்ள முகநுால் பதிவில் கூறியுள்ளதாவது:அவர்கள் மட்டுமல்ல, தி.மு.க.,வில் இருந்து, இன்னும் பலர் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காரணம், அ.தி.மு.க.,வில் யாருக்கு, எப்போது, என்ன பதவி கிடைக்கும் என்பது தெரியாது. ஏழையாக, என்ன ஜாதியாக இருந்தாலும், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால், அவர்கள் எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் கூட ஆகலாம்.
கட்சிக்கு துரோகம்:தி.மு.க.,வில் விசுவாசத்துக்கு வேலையில்லை; பணம் இருந்தால் பதவி கிடைக்கும். தி.மு.க.,வில் கொள்கைக்காக, கட்சிக்காரன்இருக்கான். அ.தி.மு.க.,வில், பதவியை எதிர்நோக்கி, விசுவாசியாக மட்டும் கட்சிக்காரன் இருக்கான்.அ.தி.மு.க.,வில் தவறு செய்தால், எந்த உயர் பதவியில் இருந்தாலும், அவர் துாக்கியெறிப்படுவார்; அதற்கு பயந்து, துரோகம் இழைக்க கட்சியினர் பயப்படுகின்றனர். தி.மு.க.,வில், கட்சிக்கு துரோகம் செய்தாலும் நடவடிக்கை இல்லை.இவ்வாறு குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், 'ஒருவருக்கு பதவி கொடுக்கும் முன்பாக, அவர்களின் நிலை, கட்சியின் மீதுள்ள ஈடுபாடு, கடந்த கால அரசியல் ஈடுபாடு ஆகியவற்றை தெரிந்து வழங்க வேண்டும்' என, பலர், 'கமென்ட்' கொடுத்து வருகின்றனர்.கட்சி தலைமையிடம் நேரில் மனக்குமுறலை வெளிப்படுத்த இயலாத தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை பகிர்ந்து வருவது, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.