அதிமுக நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுசுதணன் அதிமுக அவைத் தலைவராகவும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொருளாளராகவும், நியிமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தம்பிதுரைக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. வைத்தியலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் கட்சியின் அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக தலைமை செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தமிழ்மகன் உசேன், ஜெயலலிதா பேரவை செயலாளராக அமைச்சர் உதயகுமார், தேர்தல் பிரிவு செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். நத்தம் விஸ்வநாதன், முக்கூர் சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம், சுப்பிரமணி, குமரகுரு ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கைகள் குழு, மறுபர்சீலனை குழுவையும் அதிமுக தலைமை கலைத்துள்ளது. பொன்னையன், பண்ரூட்டி ராமச்சந்திரன், பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 11 பேர் கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.