தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனிடம் இருந்து ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. " கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூர் எனப் பரவலாக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அமைச்சரிடம் இருந்தும் மா.செ பதவி பறிக்கப்பட்டுவிட்டது. அவரது அதீத செயல்பாடுகளே வினையாகிப் போனது" என காரணத்தை விளக்குகின்றனர் அ.தி.மு.கவினர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மணிகண்டன். தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஒருவரை அ.தி.மு.க தலைமை நியமித்தாலும், தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர் கட்சித் தொண்டர்கள். ஆனால், " தன்னை சந்திக்க வரும் கட்சிக்காரர்களை விரட்டுவது, அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வது என அமைச்சரின் செயல்பாடுகள் எல்லை மீறியதால்தான், மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் அம்மா" என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.
அவர் நம்மிடம், " வேட்பாளராக மணிகண்டன் அறிவிக்கப்பட்டதும், கார்டனுக்கு புகார் அனுப்பினார் பட்டணம் காத்தான் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் ஒருவர். அந்தக் கடிதத்தில், ' தொகுதிக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர் மணிகண்டன். இவர் மதுரையில் வசித்து வருகிறார். ஒருநாள்கூட ராமநாதபுரத்தில் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை. இவரை வேட்பாளராக நியமித்ததில் கட்சிக்காரர்களுக்கு விருப்பமில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வெளியானது. தேர்தல் முடிவில் மணிகண்டன் வெற்றி பெற்றார். அதேநாளில், வண்டிக்காரத் தெருவில் உள்ள அமைச்சர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார் அந்த சீனியர். ' என்னைப் பற்றி புகார் சொல்ற அளவுக்கு வந்துட்டீங்க. உங்களை என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும். இனி அன்வர்ராஜாவின் அரசியல் எல்லாம் செல்லுபடியாகாது' எனக் கண்டபடியாக திட்டி அனுப்பிவிட்டார்.
இதன்பிறகு, எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர், ' கலெக்டர், எஸ்.பியெல்லாம் எங்க போய்ட்டாங்க. திறப்பு விழாவுக்கு வர மாட்டாங்களா... மாவட்டச் செயலாளர் பதவி கிடைச்சதுக்கு வாழ்த்து சொல்ல மாட்டாங்களா?' எனக் கடுகடுப்புக் காட்டினார். இதையடுத்து, கலெக்டர் மட்டும் நேரில் வந்து அமைச்சரிடம் பேசினார். எஸ்.பி மணிவண்ணன் வந்து பார்க்கவில்லை. இதன்பின்னர், சென்னையில் அமைச்சரை சந்திக்க கட்சிக்காரர்கள் வந்தாலும், உரிய மரியாதை கொடுக்காமல் திட்டுவார். தவிர, 'முதுகுளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் கீர்த்திகாவின் தோல்விக்கும் மணிகண்டன்தான் காரணம்' என்ற ரீதியில் தலைமைக்கழகத்திற்கு கடிதங்கள் பறந்தன. எல்லாம் சேர்ந்து அமைச்சரின் மா.செ பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது" என்றார் விரிவாக.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மா.செவாக நியமிக்கப்பட்டிருக்கிறார் முனியசாமி. இவரைப் பற்றிய புகார்களையும் இன்று காலை முதலே தலைமைக்கு அனுப்பி வருகின்றனர் கட்சி நிர்வாகிகள் சிலர். ' ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பில் இருந்தார் முனியசாமி. 96-ம் ஆண்டு ரஜினிக்கு ஆதரவாக அம்மா படத்தை அவமரியாதை செய்தவர்தான் இந்த முனியசாமி' என்றரீதியில் பறக்கும் புகார்களால் அதிர்ந்து கிடக்கிறது ராமநாதபுரம்.
எது எப்படியிருந்தாலும், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பெருமளவு மாற்றப்பட்டதில் உற்சாகமாக இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.