நாய்கள் படுத்துத்தூங்கிய இடத்தில் உறங்கியவனை அதே இடத்தில் எம்.எல்.ஏ.வாக உயர்த்தி அங்கீகரித்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று நடிகர் கருணாஸ் சட்டசபையில் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் திங்கட்கிழமை தொடங்கிய கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நேற்று தொடர்ந்து நடந்தது.
அப்போது, நடிகரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், “இன்று பெரிய கட்டிடமாக இருக்கும் சட்டமன்ற விடுதி வளாகத்தைப் பார்க்கிறேன். நான் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, தங்குவதற்கு இடமில்லாமல், அந்த சட்டமன்ற விடுதி அமைந்துள்ள பகுதியில் காவலர்கள் தூங்கியதற்குப்பிறகு, ஏதாவது ஒரு இடத்தில், நாய்கள் படுத்துத்தூங்கக் கூடிய இடத்தில் அன்று படுத்து உறங்கியிருக்கிறேன்.
தற்போது அந்த இடத்தில், எனக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா என்னை உயர்த்தி இருக்கிறார். என்னை பெற்ற தாயைவிட நான் விசுவாசம் காட்டவேண்டியவர் அவர்தான்.
பணத்துக்காக வாழக்கூடாது என்ற கொள்கை உடையவன் நான். மக்கள்தான் எப்போதும் பெரிய செல்வம். ஜல்லிக்கட்டு என்ற கலாசார விளையாட்டு மீண்டும் விளையாடப்படுவதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் மட்டும்தான் எடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.