Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

டெல்லி சென்றார் முதல்வர் ஜெயலலிதா:பிரதமர் மோடியுடன் மாலை சந்திப்பு!


தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜெயலலிதா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி பயணம் மேற்கொண்ட அவருடன், தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர்.

போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்ட அவர் 11 மணிக்கு தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார்.மதியம் டெல்லி விமான நிலையத்தை  ஜெயலலிதா சென்றதும், அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அ.தி. மு.க. எம்.பி.க்கள் 50 பேரும் விமான நிலையத்துக்கு வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கின்றனர்.

இதையடுத்து ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லத்துக்குச்  செல்கிறார். அங்கு அவர் சுமார் 2 மணி நேரம் தங்கி இருக்க உள்ளார். அப்போது மத்திய அமைச்சர்கள்  சிலர் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து அவரைச் சந்தித்து பேச உள்ளனர். அவர்களிடம் தமிழக திட்டங்களுக்கு உதவும்படி முதல்வர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது.

பின்னர் மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்வர் ஜெயலலிதா, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில்  உள்ள பிரதமரின் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்து  பேசுவார். இந்த பேச்சின்போது தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார்.

பிரதமரை சந்திக்கும் போது, அவரிடம் 36 கோரிக்கைகள் அடங்கிய 32 பக்க கோரிக்கை மனுவை கொடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். பின்னர் இன்றிரவு 7 மணிக்கு  ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னைத் திரும்புகிறார்.

தமிழகத்தின் முதல்வராக ஆறாவது முறை பொறுப்பேற்ற ஜெயலலிதா முதன்முறையாக  டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.     

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.