Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக சேரும் 4 வருட பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவு


பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 4 ஆண்டுகள் பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். பாடத்திட்டத்தையும் ஆய்வு செய்தார்.

ஒரு ஆண்டு பி.எட். படிப்பு 

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 2 ஆண்டுகள் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் பணியில் சேர்கிறார்கள். அவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய பட்டப்படிப்புடன் பி.எட். படிப்பு தேவை.

பி.எட். படிப்பு காலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருடமாக இருந்தது. அதன்பிறகு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட். படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தி உள்ளது.

பிளஸ்-2 படித்தவர்களுக்கு 4 வருடம்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நேரடியாக சட்டக்கல்லூரியில் சேர்ந்து 5 வருட பி.எல். படிப்பை படிக்கிறார்கள். அதாவது பி.ஏ. என்ற 3 வருட பட்டப்படிப்பையும், பி.எல். என்ற 3 வருட படிப்பையும் சேர்த்து ஒருங்கிணைந்த படிப்பாக பி.எல் வழங்கப்படுகிறது.

அதுபோல பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பை படிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் 3 வருட பட்டப்படிப்பையும், 2 வருட பி.எட். படிப்பையும், 4 வருட பி.எட். என்ற ஒருங்கிணைந்த படிப்பாக படித்தவர்கள் அதே சம்பளத்தில் ஆசிரியர் வேலையில் சேரலாம்.

17 கல்லூரிகளில்...

இந்த 4 வருட படிப்பை தமிழகத்தில் கொண்டுவர 17 பி.எட். கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு (2016-2017) முதல் அந்த படிப்பை தொடங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான பாடத்திட்டமும் தயாராகி விட்டது. இந்த பாடத்திட்டங்களை ஜெயலலிதா வாங்கிப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் அந்த பாடத்திட்டம் தொடர்பாக சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஒரு சில நாட்களில் எந்த, எந்த கல்லூரிகளில் இந்த 4 வருட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.